அம்பலாங்கொட – பலப்பிட்டிய அவஸவத்தை சந்தியில் வைத்து வர்த்தக நிலைய உரிமையாள் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 25ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தக் கொலையில் தெற்கு தெல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.







