கொழும்பு, புறக்கோட்டை, மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (05.10) இடம்பெற்றுள்ளதோடு, அருகில் இருந்த மேலும் இரண்டு வீடுகளில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு இரண்டு மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.







