கொஹுவல, சரணங்கர வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேற்று (18.09.2024) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 43 வயதுடைய கடையின் உரிமையாளரே கொல்லப்பட்டதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் விசாரனைகளின் போது தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







