கேகாலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சமந்த ரணசிங்க, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவுக்குப் பதிலாக நாடாளுமன்றுக்கு தெரிவாகவுள்ளார்.
பொதுத் தேர்தலில் 40,000க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவால் அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் பதவியேற்பார்.
கோசல ஜயவீர கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு காரணமாக காலமானதையடுத்து, நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையை, நாடாளுமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.







