களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹுருபொல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை (08.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை, கல்பாத பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 1,080 லீற்றர் கோடா (06 பீப்பாய்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here