சொத்துக்கள் தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
இதேநேரம் தமது சொத்துக்கள் குறித்து சந்தேகம் உள்ளவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடுவலை, மஹரகமை ஆகிய பகுதிகளில் கோடிகணக்கக்கான பெறுமதியுள்ள 2 சொகுசு வீடுகள் தனக்கு உள்ளதாக எதிர்கட்சி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“எனது வீடுகள் எங்கிருக்கிறதோ அங்கேயே இருக்கட்டும். வீடு எங்கே உள்ளது என உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. எவருக்கேனும் அது தொடர்பில் பிரச்சினை இருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்” என லால்காந்த குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






