வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டி விட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, அஜ்மல் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளார்கள்.
மேலும் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுடன் டீஏஜிங், ஏஐ தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் விஜயகாந்தை கூட ஏஐ நுட்பத்தின் ஊடாக இதில் நடிக்க வைத்துள்ளார்கள்.

கோட் படத்தில் நடிகர் விஜய் தனது படப்பிடிப்புகளை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே முடித்துவிட்ட நிலையில், தற்போது நடிகர் ஜெயராம் நடிக்கும் காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கோட் படத்தில் அனுமதி இல்லாமல் வெடிகுண்டு பாவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தியதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

அதாவது கடந்த இரண்டு நாட்களாக இரவில் நடைபெற்ற ஆக்சன் காட்சிகளில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோட் பட படப்பிடிப்பிற்குஅனுமதி பெற்ற நிலையில், அதன் போது சாலைகளில் வெடிப்பொருட்களை பயன்படுத்துவது குறித்து அறிவிக்கவில்லை எனவே தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் படக்குழுவினரும் விளக்கம் கேட்டு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








