ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்லவென வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அமுலாகும் வகையில் ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளன.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கோதுமை மா கிலோவொன்று சந்தைகளில் தற்போது 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

10 ரூபா விலை குறைப்பு மூலம் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க வேண்டுமானால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here