கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

ஹார்ட் ராக் மைதனாத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொலம்பியா மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதின.

இரு அணிகளும் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

எனினும், ஆட்ட நேர முடிவில் எந்த அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 112வது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணியின் லாட்டாரோ மார்டினெஸ் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம் கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்றுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here