ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன இறங்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

தமது கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றாததால் அவருக்கு ஆதரவளிக்கக்கூடாதெனவும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவை களமிறக்கவேண்டும் எனவும் மொட்டுக் கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையிலேயே தம்மிக்க பக்கம் சாயாது, மொட்டுக் கட்சியை ரணில் பக்கம் சாயவைப்பதற்குரிய அரசியல் நகர்வுகளில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். அதன் ஓர் அங்கமாகவே மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் அவர் அண்மையில் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here