அண்மையில் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1,066 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக 16,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here