Friday, July 24, 2026
No menu items!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை

2024 ஆம் ஆண்டுக்கான G.C.E. சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் மாணவர்கள் தங்களது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

கா/பொ/த சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் மாவட்டத்தில் முதலிடம்!

2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு கல்வி வலயங்களில் செயல்படும் அனைத்து பாடசாலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிளிநொச்சி மகாவித்தியாலயம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பள்ளியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பலர் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க வகையில் 23 மாணவர்கள்...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

அண்மையில் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1,066 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்காக 16,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.    

க.பொ.த சாதாரண தர வினாத்தாள் தொடர்பாக பரவி வரும் போலிச் செய்திகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அறிவியல் தேர்வு வினாத்தாள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. "இந்த முறை பாடத்திட்டத்தைத் தாண்டி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தீர்வாக, அறிவியல் பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 08 மதிப்பெண்கள் வழங்கப்படும், மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண் அளவுகள்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறு திப்படுத்தும் கடிதத்தை வெளியிடுவதற்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண அலுவலகங்கள் காலை 8.30 மணியிலிருந்து நண்பகல் 12.30 மணி வரை திறந்திருக்குமென்று பதில் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்....

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்!

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பரீட்சைகள் திணைக்களம் தபால் மூலம் அனுப்பியுள்ளது. அதன்படி, பள்ளி விண்ணப்பதாரர்களின் அட்டைகள் அவர்களின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டன, அதே நேரத்தில் தனியார் விண்ணப்பதாரர்கள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் அவர்களின் அட்டைகளைப் பெறுவார்கள். திருத்தங்களை மார்ச் 10 ஆம் தேதி வரை www.doenets.lk என்ற இணையதளத்தில் ஆன்லைனில்...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதம்!

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை doenets.lkமற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும்...

வெளியாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்  செப்டெம்பர் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த இறுதி வாரத்தில் செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைவடைந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 2024 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img