கம்புருபிட்டியவில் தனது சகோதரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாயாரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை வீதியிலுள்ள அவரது 33 வயது சகோதரி வீட்டில் தலையில் காயங்களுக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களின் தாயார் சுயநினைவின்றி காணப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கம்புருபிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








