புத்தளம், சிலாபம் கடற்கரை பகுதியில் படகுகள் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியகுடியிருப்பு மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 02 படகுகள் மற்றும் 1,331  கிலோ 830 கிராம் நிறையுடைய 42 பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here