நுவரெலியா,நோர்வுட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வுட் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா,நோர்வுட் பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here