நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 260 கிராம் 76 மில்லி கிராம் ஹெரோயின்,  250 கிராம் மில்லி 02 கிராம் ஐஸ், 21,139 கிராம் மில்லி 574 கிராம் கஞ்சா , 168 போதை மாத்திரைகள் மற்றும் 1,906 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here