லட்வியாவின் வெர்க்னெட்வின்ஸ்க் எல்லை பகுதியில் இலங்கையரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ்சிற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இருவரில் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பெலாரஸ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் செய்தி தொடர்பான சிறப்புபார்வை சட்டவிரோதமான செயற்பாடுகள் மற்றும் மனிதக்கடத்தல் அத்துடன் வெளிநாட்டு மோகம் என்பன நாளுக்கு நாள் சமூகத்தில் அதிகரித்து வருகின்றன.
அதற்கு உதாரணமாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
மேலும் லட்விய பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கி தங்களை எல்லைப்பகுதியிலிருந்து ஆற்றுக்குள் தூக்கி வீசியதாக உயிர் தப்பிய ஒருவர் அந்நாட்டு ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் எல்லைப்பகுதியில் கடுமையான குளிர் நிலவியதாகவும் அதானால் ஏற்பட்ட சோர்வையும் கருத்தில் கொள்ளாது தங்களை கடுமையாக நடத்தியதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
தான் இலங்கையை சேர்ந்த விக்ரம் எனவும் உயிரிழந்தவர் தனது நண்பர் டிலக்சன் எனவும் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பெலாரஸின் விசாரணை மற்றும் செயல்பாட்டு குழு விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவ இடத்தில் 34 வயதை உடைய இலங்கையர் ஒருவரின் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்த பரிசோதனையை வித்தெப்ஸ்க் மாகாண நீதிமருத்துவ ஆய்வுக் குழு முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிகவிசாரணைகளை பெலாரஸ் பொலிஸார்முன்னெடுத்து வருவதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை போலந்து, லிதுவேனியா மற்றும் லட்வியாவுடனான பெலாரஸ் எல்லையில் 78 அகதிகளின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிகதகவலை பெற்றுக்கொள்ள இலங்கைதகவல் திணைக்களத்திற்கும் வெளிநாட்டுஅமைச்சிற்கும் வெற்றி ரீவி செய்தி பிரிவுதொடர்பு கொண்டு வினவியது.
இதன் போது பதிலளித்த அதிகாரிகள்இதுவரை தங்களுக்கு குறித்த சம்பவம்தொடர்பான தகவல்கள் எதுவும்கிடைக்கப்பெற வில்லையெனவும் தகவல்கிடைத்தால் அறியத்தருவதாகவும் கூறினர்.
எது எப்படியோ சட்டவிரோதமானசெயற்பாடுகள் மற்றும் மனிதக்கடத்தல்அத்துடன் வெளிநாட்டு மோகம் என்பனநாளுக்கு நாள் சமூகத்தில் இவ்வாறானசோக சம்பவங்களை பதிவு செய்துவருகின்றமை சுட்டிக்காட்டதக்கது.








