இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் (STC) முன்னாள் தலைவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC), கைது செய்துள்ளது.
இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு ரூ.99 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) கூற்றுப்படி,
2015 ஆம் ஆண்டு 2015 ஆம் ஆண்டில் 50 தற்காலிக களஞ்சியசாலைகள் (கொட்டகைகள்) இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் வெளித்தரப்பினருக்கு அதே தொகைக்குச் சமமான இலாபத்தை வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று காலை 8.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தலைமை நீதித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தவுள்ளார்.








