சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிலாக்கண்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய வேளை உழவு இயந்திரத்துடன் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம்தொடர்பில் தெரியவருகையில்,

சாவகச்சேரி பொலிஸ் நிலைய சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள்தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சாவகச்சேரி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த வேளை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here