நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவீதிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (02.10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவீதிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (90 போத்தல்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







