மொனராகலை, தணமல்வில பிரதேசத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 05 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 15 ஆயிரம் லீற்றர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் தணமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here