மொனராகலை, புத்தல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெல்வத்தை மற்றும் வருணாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 06 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் கோடா, பீப்பாய்கள் மற்றும்  எரிவாயு அடுப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here