யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்று காலை முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினரும், ஓய்வு பெற்ற அதிபருமான சிவநாதன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் “தமிழே முருகன் “ எனும் தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவை, தொல்பொருள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கயிலைநாதன் கயிலை வாசன் நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டன.









