ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு,சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் நாளாந்த நிகழ்வாக ஆன்மீக அருளுரை நிகழ்வு நடைபெற்றது.
“முன்னே தோன்றிடினே” என்ற ஆன்மீக தலைப்பில் அருளுரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை உறுப்பினரும், ஓய்வுநிலை அதிபருமான திரு.ஆ.சிவநாதன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
08/08/2024 ந்திகதி வியாழக்கிழமை காலை 10.45 மணி தொடக்கம் 11.45 மணி வரை இடம்பெற்ற இவ் நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.









