ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது அதற்கு சமமான வேறு ஆவணங்கள் இல்லாவிட்டால், அவ்வாறானவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிராம சேவை உத்தியோகத்தரிடம் இரு புகைப்படங்களுடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதனூடாக தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இது பொருந்துமெனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டு அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆவணம் அல்லது ஓய்வுப்பெற்றோருக்கான ஆவணம் என்பவற்றை வாக்களிப்பு செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.








