அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி அமைச்சர்கள் டி. வி சானக, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்ச, அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறையல்ல என அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறாயினும், அந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை எனத் தெரியவருகிறது.








