உடலின் சர்க்கரை அளவை குறைக்க உதவும். அமிர்தவல்லி இலை.
இதை வீட்டில் டீ போல தயாரித்து குடிக்கலாம்.
தினமும் இதை சாப்பிட்டு வந்தால் சக்கரை நோயாளிகள் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

நீங்கள் அலட்சியமாக வீசும் நாவல் கொட்டைகளில் சர்க்கரை நோளிகளுக்கு நிறைய பயன் உள்ளது.
இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது.

சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரக விதைகளும் உதவுகின்றன.

ஒவ்வொரு நாளும் வெந்நீரை பருகி வருவது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சக்கரையின்  அளவை குறைத்து விடும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகள்..

பாகற்காய் – இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் – கீரைகள் வகைகள்

பச்சை நிற காய்கறிகள் ( பூண்டு, கேரட், வெள்ளரி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர் )

பழவகைகள் ( ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, நாவல்பழம், கொய்யா)

இவை சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தைக் குறைக்கின்றது. இதனால், உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது.

பட்டை – வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவு சமநிலைப்படுத்தப்படும்.

நட்ஸ் – நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.

சிட்ரஸ் நிறைந்த பழங்கள்- எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள காயம் விரைவில் ஆற உதவுகிறது.  நோய்த்தொற்றைத் தடுக்கும்.

பீன்ஸ் வகைகள் – பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

வெந்தயம் – வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

நாவல் பழம் – நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். நாவல் பழக் கொட்டைகளை பொடியாக்கி தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here