மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலையில் உள்ள சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று (ஜனவரி 10) பிற்பகல் அவர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வா சில காலம் சிறைச்சாலை வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசனையின் பேரில் இருந்ததால், அவரை இனி சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லை என விசேட வைத்திய சபை பரிந்துரைத்துள்ளதால், அவர் சிறைச்சாலையில் உள்ள சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பேச்சாளர் மேலும் கூறினார்.








