தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணிவரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தும் கடிதங்களை பெற்றுக்கொள்ளமுடியும் .

அத்தோடு காலி , குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கிளைகளில் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here