ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (06) பாராளுமன்றத்தில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்வரும்  9 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சி சமர்ப்பிக்கும் என்று அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பெரேரா இந்த அறிவிப்பை வெளியிட்டார், சபாநாயகருக்கு எதிரான பிரேரணையை இந்த வார இறுதியில் முறையாக கையளிக்கும் எதிர்க்கட்சியின் நோக்கத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த அறிவிப்புக்கு பதிலளித்த சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை தாமதமின்றி எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பிரேரணை முறையாக சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதைத் தொடர்ந்து வரும் முதலாவது பாராளுமன்ற வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here