மத்திய கிழக்கு நாடான சிரியா முழுவதும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் காரணமாக இவ்வாறு மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பக் குழுக்கள் விரைவில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தாக்குதல் காரணமாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதா? என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் சிரியாவின் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here