நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தற்போது தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி. தேசபந்து தென்னகோனுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சிறப்பு பாதுகாப்பை அமுல்படுத்தியுள்ளது.

மார்ச் 20 அன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் தென்னக்கோன் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

டிசம்பர் 31, 2023 அன்று வெலிகமாவில் கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தென்னகோன் மற்றும் ஏழு பேருக்கு முன்னதாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here