பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்காக இலங்கை மத்திய வங்கி வழங்கிய சலுகைக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
பராட்டா சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் கடன் தகவல் பணியகத்துடன் ஒருங்கிணைந்து, கடன் மறுசீரமைப்பிற்கான பொருத்தமான வழிமுறை உருவாக்கப்படும்.
கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்து வங்கிகளுடன் இன்னும் விவாதிக்காத நிறுவனங்களுக்கு, அதற்கான வாய்ப்பு இன்றும் உள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவிக்கிறது.







