கைதிகளை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் (11.09) விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், ஆணையாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை, கைதி ஒருவருக்கு போதுமான அளவில் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here