நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள், நீதி அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ளது என்ற வகையில் சம்பவத்திற்கு தானே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சம்பவம் குறித்து (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆனால் உயிரிழப்புகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் “உயிரிழப்புகள் குறித்து தான் மிகவும் கவலையடைவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இடம்பெற்ற சம்பவம் குறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்துவார்கள் என்றும், இது போன்ற சம்பவம் மீண்டும் நேராதிருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
எந்தவொரு தனிநபர் மீதும் குற்றம் சுமத்துவதை விட, உண்மைகளை கண்டறிவதிலும் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதிலுமே தனது கவனம் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.







