புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் நேற்று (20) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையெனவும் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 05 அடி 08 அங்குலம் உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரது இடது மார்பகத்தில் “அம்மா” எனவும் வலது மார்பகத்தில் “வினித்தி” எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தகவல் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிலாபம் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here