மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (20)  குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

44 வயதுடைய இரு பிள்ளைகளின்  தந்தையாரே இவ்வாறு  வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடா பகுதியில்  வீதியில் குறித்த நபர்  வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here