இந்த வருடம் புனித யாத்திரை காலம் தொடங்கியதிலிருந்து,சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருட்களைக் கடத்தியதாக 322 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பிரிவில் உள்ள ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேனை மற்றும் நல்லத்தன்னி காவல் நிலையங்கள் நடத்திய சோதனைகளின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, சந்தேக நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், இந்த சோதனைகளின் போது ஹெரோயின், கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்), கஞ்சா, ஹஷிஷ், குஷ், மாவா, போதை தரும் இனிப்புகள் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.








