சீன தலைநகரான பீஜீங்கில் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் ஊடாக ஆசிய பசுபிக் நாடுகளில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுக்கு இடையிலான உச்சி மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் பங்கேற்றிருந்தார்.
இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் தொழில் உரிமை தொழில் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.








