நாட்டில் தொடரும் தற்போதைய மழைப்பொழிவுடன் மலையக மற்றும் தாழ்நில பகுதி காய்கறி வகைகள் சிலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.

அதன்படி, கடந்த வாரம் 350 முதல் 400 ரூபாய் வரை இருந்த தக்காளி கிலோவின் மொத்த விலை 600 முதல் 650 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, 250 ரூபாய்க்கு இருந்த கறி மிளகாய் கிலோவின் விலை 400 முதல் 450 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன், 150 ரூபாவாக இருந்த முட்டைக்கோஸ் (கோவா) கிலோவின் மொத்த விலை 350 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

பண்டிகை காலம் நெருங்குவதுடன் காய்கறி விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் முன்னாள் அமைப்பாளர் அனில் இந்திரஜித் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அனில் இந்திரஜித்,

“இந்த நாட்களில் காய்கறி விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாட்டில் நிலவும் காலநிலை ஆகும். தக்காளி விலை அதிகரித்துள்ளது. மொத்த விலை சுமார் 600 ரூபாய். அதே போல போஞ்சி 400 முதல் 500 ரூபாய் வரை உள்ளது. கேரட் 200 முதல் 250 ரூபாய் வரை உள்ளது. லீக்ஸ் 200 ரூபாய். பச்சை மிளகாய் 350 முதல் 400 ரூபாய் வரை உள்ளது. தாழ்நில காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. புடலங்காய் கிலோ இந்த நாட்களில் சுமார் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல பீர்க்கங்காய் 200 முதல் 250 ரூபாய் வரை உள்ளது. பூசணிக்காய் விலையும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது. கிலோவின் விலை 200 ரூபாயை தாண்டியுள்ளது. வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் மட்டுமே 100 ரூபாய்க்கு குறைவான விலையில் உள்ளன. மொத்தமாக கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வருடத்திலும் டிசம்பர் மாதமாகும் போது ஒவ்வொரு வருடமும் சாதாரணமாக காய்கறி விலை அதிகரிப்பு காணப்படுகிறது. அதனால் எதிர்காலத்தில் விலை குறைவை எதிர்பார்க்க முடியாது. விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.”

இதற்கிடையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கிறார்.

ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 30 முதல் 32 ரூபாய் வரை இருந்தாலும், தற்போது பண்ணைகளில் இருந்து முட்டைகள் அதே விலையில் தான் வெளியிடப்படுவதால் உற்பத்தியாளர்களால் இலாபம் ஈட்ட முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பண்டிகை காலத்தில் சந்தைக்கு தேவையான முட்டை மற்றும் கோழி இறைச்சியை எவ்வித தட்டுப்பாடும் இன்றி தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக அஜித் குணசேகர மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here