புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் முந்தல் மகாகும்புக்கடவல நாத்தாண்டி தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  04 கிராம சேவகர் பிரிவுகளில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேரும் மகாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  25 கிராம சேவகர் பிரிவுகளில் 647 குடும்பங்களைச் சேர்ந்த 2441பேரும் தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  04 கிராம சேவகர் பிரிவுகளில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  09 கிராம சேவகர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here