வெலிகமவில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரி தேசபந்து தென்னகோனின் சட்டதரணியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான வேறு சில ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் இந்த சீராக்கல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கோரப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (17) தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணிகள் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here