நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் டி-56 ரக துப்பாக்கியொன்றையும்  வைத்திருந்த மூவர் இன்று(27)  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகங்முவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றில் T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,  துப்பாக்கி எண் அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கும்பலொலுவ பகுதியைச் சேர்ந்த  51 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்  என தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாவுல, அரிஸ்டன் வீதி பகுதியில்  பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவராவார்.

மேலும், எத்திமலை, தொரத்துபிட்டிய பகுதியில் உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அத்தமலை குளம் பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here