இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்காகக் கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்ட அமைச்சரவை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

எபிக் லங்கா தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவைப் பரிசீரலனை செய்ததை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மொஹமட் லபார் தாகீரினால் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை அமுலில் வகையில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம், உரியக் கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்தக் கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இது முற்றிலும் சட்ட விரோதமானது எனவும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here