நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரணமான சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா கைத்தொழிற்துறையினரின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான சுற்றுலா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சமிர சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் பல பகுதிகளில் தற்போது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இது சுற்றுலாத்துறைக்கு நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்த சம்பவங்களால் வீதியில் சுதந்திரமாக செல்வதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடும்.

நாட்டுக்குவரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு காரணமாக குற்ற வலையமைப்பு ஒழுக்கப்படவில்லையாயின் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான சுற்றுலா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சமிர சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here