கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனத்தில் சூட்சுமான முறையில் வாகனத்தின் அடிப்பகுதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட பெறுமதி மிக்க 32 பாலை மர குற்றிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் கப்ரக வாகனத்தின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பறி முதல் செய்யப்பட்ட மரக்குற்றிகள் கப்ரக வாகனம் மற்றும் சந்தேக நபரையும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.








