மிரிஸ்ஸ கடற்கரையில் நீரில் மூழ்கவிருந்த 57 வயதான ரஷ்ய சுற்றுலா பயணி, இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காக்கும் வீரர்களின் விரைவான நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டார்.

இலங்கை கடலோர காவல்படையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஞாயிறு அன்று காலை சுமார் 9.20 மணியளவில் நடந்துள்ளது. இதன்போது அனடோலி என அடையாளம் காணப்பட்ட ரஷ்ய நாட்டவர் கடலில் தத்தளிப்பதை உயிர்காக்கும் வீரர்கள் கண்டுள்ளனர்.

உயிர்காக்கும் வீரர்கள் உடனடியாக செயல்பட்டு, அவரை வெற்றிகரமாக பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.

உயிர்காக்கும் வீரர்களின் உடனடி நடவடிக்கையும், தயார்நிலையும் சுற்றுலா பயணியின் உயிரைக் காப்பாற்ற உதவியதாக கடலோர காவல்படை தெரிவித்தது.

இலங்கையின் கடற்கரையோரம் ஏற்படும் அவசரநிலைகளுக்கு பதிலளிப்பதிலும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தனது உறுதிப்பாட்டை அந்த திணைக்களம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here