2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு இன்று (செப். 23) ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு செப்டெம்பர் 26ஆம் திகதி வரை தொடர்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முடிவு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இன்றைய அமர்வு நிரல்பட்டியல்:

மு. 9.30 – 10.00: நிலையியற் கட்டளை 22 கீழ் பாராளுமன்ற அலுவல்கள்

மு. 10.00 – 11.00: வாய்மூல விடைக்கான கேள்விகள்

மு. 11.00 – 11.30: நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகள்

இன்றைய (செவ்வாய்க்கிழமை) முக்கிய விவாதங்கள்:

மு. 11.30 – பி. 5.00:
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் – இரண்டாவது வாசிப்பு

பி. 5.00 – 5.30:
எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதம்

நாளைய (செப்டெம்பர் 24) அமர்வு:

மு. 11.30 – பி. 5.00:
தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாவது வாசிப்பு

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here