ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையில் இன்று (27) சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து ஆதரவளிக்க தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார்.
இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் சுற்றுலா, துறைமுகம், முதலீட்டு துறைகளின் முன்னேற்றத்துக்கு நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் கலாச்சார மற்றும் தொல்லியல் பெறுமதியான படைப்புக்களை பாதுகாத்தல் , கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் மற்றும் இலங்கையின் கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்கவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
“க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை புதிய நிலைக்குக் கொண்டு செல்ல நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.