Sunday, June 7, 2026
No menu items!

அநுர குமார திசாநாயக்க

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க நாடு ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தல்!

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பது என்பது அரசியல் அல்லது பொருளாதார விவாதத்திற்குரிய விஷயம் அல்ல, இது ஒரு தேசிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். ‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தலைப்பில், போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்...

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற பின்னர், நான்கு அமைச்சுகளுக்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்திற்கு பதில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்ணான்டோ நியமிக்கப்பட்டார். டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக எரங்க வீரரத்ன...

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து !

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக பொது முகாமையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மறு அறிவித்தல் வரை இந்த விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது...

அரசாங்க பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கு வாகன, இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் ஆதரவு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு வாகன மற்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் முழு ஆதரவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் செப்டம்பர் 16 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், வாகன இறக்குமதி துறையின் விருத்தி, எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்திற்கான...

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்; ஜனாதிபதி!

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

பேர்லினின் பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நேற்று (11) ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரை (Frank-Walter Steinmeier) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார். உத்தியோகபூர்வ அரச வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்​​ இலங்கை-ஜெர்மன் நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும்...

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பொசொன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் பொசொன் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு...

நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்த சிறிவர்தன!

நிதியமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (02) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் நிதியமைச்சின் செயலாளர்...

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய வரி வாரம்!

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல்...

புதிய வடக்கு மாகாண பிரதமச் செயலாளர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (20.05.2025) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எதிரணி சார்பில் கேள்வி!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரச நிதியிலிருந்து மேலும் ரூ. 100 பில்லியன் கோருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர்...
- Advertisement -spot_img